போர் ஓய்ந்த நிலையில் ஈரான் மீது டிரம்ப் நம்பிக்கை isreal iran war| US president trump|
போர் ஓய்ந்த நிலையில் ஈரான் மீது டிரம்ப் நம்பிக்கை isreal iran war| US president trump| இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் ஓய்ந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், கடைசி ரவுண்டாக ஈரான் தாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் போர் விமானங்கள் கிளம்பின. அது போர் நிறுத்தத்தை மீறும் செயல்; உடனே விமானங்களை திரும்பி வரச்சொல்லுங்கள் என்று இஸ்ரேலை எச்சரித்தார் டிரம்ப். இஸ்ரேல் கேட்கவில்லை. ஈரானில் குண்டுகளை வீசிவிட்டே விமானங்கள் திரும்பின. இதனால், அதிருப்தியை வெளிப்படுத்தினார் டிரம்ப். அதன் பிறகு தாக்குதல் ஓய்ந்த நிலையில், பேட்டி அளித்த டிரம்ப் ஈரானில் அமைதி திரும்பும் என கூறினார். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கப்போவது இல்லை. இப்போதைக்கு அதைப்பற்றி அவர்கள் நினைக்கப்போவது இல்லை. யுரேனியம் செறிவூட்டல் செய்யப்போவது இல்லை. அதனால், அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கப்போவதும் இல்லை. ஈரானிடம் நிறைய எண்ணெய் வளங்கள் இருக்கிறது. அவர்கள் சிறந்த வர்த்தக நாடாக இருக்க போகிறார்கள். அதை நன்றாகவும் செயல்படுத்த போகிறார்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கப்போவது இல்லை. விரைவில் அமைதி திரும்புவதை தான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும். அதை பார்க்க விரும்பவில்லை என்று அதிபர் டிரம்ப் கூறினார்.