அறிவாலய ஆபரேஷனில் சிக்கும் தலைவர்கள் | MDMK | DMK | Erode
அறிவாலய ஆபரேஷனில் சிக்கும் தலைவர்கள் | MDMK | DMK | Erode ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்றனர். கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில், தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் உள்ளிட்ட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த சட்டசபை தேர்தலில், ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இந்த முறை 12 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே, கட்சியினரின் விருப்பம் என துரை வைகோ கூறி வருகிறார். இதனை சுட்டிக்காட்டி பொதுக்குழுவில் பேசிய சிலர், தி.மு.க., தலைமைக்கு சவால் விடும் விதமாக பேசிய தகவல், உளவுத்துறை மூலமாகா திமுக மேலிடத்துக்கு தெரியவந்தது. இது அறிவாலய வட்டாரத்தை அதிருப்தி அடைய வைத்து உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ம.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ளவர்களை தேடிப்பிடித்து, தி.மு.க.,வில் சேர்க்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் புறநகர் மாவட்ட ம.தி.மு.க., முன்னாள் செயலரும், உயர்மட்டக் குழு உறுப்பினருமான முத்துரத்தினம் தலைமையில் ரமேஷ், தர்மலிங்கம், குமார் ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர். இது குறித்து திமுக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ம.தி.மு.க., நிர்வாகிகள் என குறிப்பிடாமல் மாற்று கட்சியினர் என்றே சொல்லப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அறிவாலயத்துக்கு எதிரான மதிமுகவினரின் பேச்சு தான் என்கின்றனர் திமுகவினர். கூட்டணி தர்மம் கருதி, ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை சேர்க்காமல் இருந்தோம். ஆனால் இப்போது 12 தொகுதிகள் கேட்டு நெருக்கடி தருவதுடன், பா.ஜ.,விடம் ரகசிய உறவு வைத்து, மத்திய அமைச்சர் பதவிக்கு பேரம் பேசுவது தெரியவந்துள்ளது. ம.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டோம்.ஏன் கூட்டணியை விட்டு வெளியே வரக் கூடாது. நாங்கள் கூட்டணியினர் தானே தவிர அடிமைகள் அல்ல என, பொதுக்குழுவில் ம.தி.மு.க.,வினர் பேசியுள்ளனர்; அரங்கமே கைத்தட்டி வரவேற்றுள்ளது. அதனால், அக்கட்சி இனியும் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.