உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்புவனம் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு | custodial death | Thirupuvanam police station

திருப்புவனம் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு | custodial death | Thirupuvanam police station

திருப்புவனம் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு | custodial death | Thirupuvanam police station | High Court Bench சிவகங்கை , திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் தற்காலிக ஊழியர், அஜித்குமார் மரணம் அடைந்தார். அவரை தாக்கியதாக போலீசார் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் இது தொடர்பாக கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என அதிமுக வக்கீல்கள் ராஜராஜன், அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் முன் முறையீடு செய்தனர். வக்கீல்கள் கூறுகையில், போலீசார் கடுமையாக தாக்கியதில் தான் அஜித்குமார் இறந்துள்ளார். தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 லாக்அப் டெத் நடந்ததாக கூறப்படுகிறது என்றனர். 24 சந்தேக மரணங்கள் குறித்து தங்களது தரப்பு பதில் என்ன என அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அடித்து கொல்லப்பட்டவர் என்ன தீவிரவாதியா? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத போது இது போன்ற தாக்குதல் நடத்தியது ஏன் என சரமாரி கேள்வி எழுப்பினர். இது குறித்து பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறிய நீதிபதிகள், நாளை இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டனர்.

ஜூன் 30, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KRISHNAN R
ஜூலை 01, 2025 08:59

புகார் அளித்த நபர்கள் பின்புலம் என்ன. ஏன்.... ஒரு குறிப்பிட்ட கட்சி போலிசு நடவடிக்கையில்..தலையிடுகிறது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி