உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபத்தில் முடிந்த அதிக போதை: காருக்குள் நடந்தது என்ன? | Drinking in car | Friends locked death | ove

ஆபத்தில் முடிந்த அதிக போதை: காருக்குள் நடந்தது என்ன? | Drinking in car | Friends locked death | ove

ஆபத்தில் முடிந்த அதிக போதை: காருக்குள் நடந்தது என்ன? | Drinking in car | Friends locked death | over liquor consumed | Tirupati | திருப்பதி மாவட்டம் திருச்சானூர் ரங்கநாதம் தெருவில் காருக்குள் 2 இளைஞர்கள் சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு விசாரித்தனர். இறந்தவர்கள் புச்சிநாயுடு கண்ட்ரிகா, கோவிந்தப்பா கண்ட்ரிகா கிராமங்களை சேர்ந்த திலீப், பில்லாரி விநாயகா என்பது தெரிந்தது. திருச்சானூரில் பணியாற்றி வரும் இருவரும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் காருக்குள்ளேயே அமர்ந்து மது குடித்துள்ளனர். காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆனில் வைத்துக்கொண்டு மது குடித்த இருவரும், போதையில் காரிலேயே தூங்கி விட்டனர். நீண்ட நேரம் ஆனில் இருந்ததால் பெட்ரோல் தீர்ந்து, கார் என்ஜின் ஆப் ஆகிவிட்டது. ஆனால் அது தெரியாத அளவுக்கு இருவரும் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர். கார் கதவுகள் லாக் செய்திருந்ததால் மூச்சு திணறி இருவரும் இறந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக திருச்சானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !