உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2ம் வகுப்பு மாணவன் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம் | School student dead | School campus

2ம் வகுப்பு மாணவன் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம் | School student dead | School campus

2ம் வகுப்பு மாணவன் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம் | School student dead | School campus | Mysterious death | 3 Arrested | சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரி வேங்கைபட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் 7 வயது மகன் அஸ்விந்த். சிங்கம்புணரி தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் பள்ளி வேனில் சென்று வருவது வழக்கம். ஆனால் நேற்று வேன் ரிப்பேர் என்று பள்ளியில் இருந்து காரில் வந்து அஸ்வந்தை அழைத்து சென்றுள்ளனர். மாலை பள்ளியில் இருந்து அவனது பெற்றோருக்கு அழைப்பு வந்துள்ளது. அஸ்விந்துக்கு திடீரென வலிப்பு வந்ததால், சிங்கம்புணரி அரசு தாலுக்கா தலைமை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறியுள்ளனர். பதறியடித்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாயிலும், மூக்கிலும் ரத்தம் கசிந்தபடி மர்மமான முறையில் அஸ்விந்த் இறந்து கிடந்தான். மகனுக்கு என்ன நடந்தது என்பது பற்றி பள்ளி நிர்வாகம் தரப்பில் எந்த தகவலும் சொல்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஊர்மக்கள் சடலத்துடன் சாலை மறியல் செய்தனர். 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் சிறுவனின் சடத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தந்தை பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று அஸ்விந்துடன் சேர்த்து 6 மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் ஜான் பீட்டர் மாணவர்களை காரில் இருந்து இறக்கி விட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் இறங்கி சென்று விட்டதாக நினைத்து காரை லாக் செய்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் மாலை 3 மணிக்கு மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல காரை திறந்தபோது சிறுவன் அஸ்விந்த் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவனை மருத்துவமனைக்கு தூக்கிசென்று பரிசோதித்தபோது மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதை உறுதி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிறுவன் மரணத்திற்கு காரணமான சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் ஜான் பீட்டர், பள்ளி தாளாளரின் கணவர் சங்கரநாராயணன், மகன் மகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி