உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராமதாசுக்கு ஆதரவாக பேசிய எம்எல்ஏவை நீக்கிய அன்புமணி pmk| ramadoss| anbumani| mla arul

ராமதாசுக்கு ஆதரவாக பேசிய எம்எல்ஏவை நீக்கிய அன்புமணி pmk| ramadoss| anbumani| mla arul

ராமதாசுக்கு ஆதரவாக பேசிய எம்எல்ஏவை நீக்கிய அன்புமணி pmk| ramadoss| anbumani| mla arul பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே யார் தலைவர் என்பதில் கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்சி நிர்வாகிகளும் 2 பிரிவாக பிரிந்துள்ளனர். ராமதாசை ஆதரிக்கும் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், சில தினங்களாக அன்புமணிக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். ராமதாஸ் தான் பாமக. அன்புமணி அவரிடம் மன்னிப்பு கேட்டு ஒன்றுசேர வேண்டும்; சண்டை போட்டால் கட்சி உடைந்துவிடும் என்றெல்லாம் கூறியிருந்தார். இது, அன்புமணி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை கடுப்பேற்றி உள்ளது. எம்எல்ஏவுக்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக கூறி, எம்எல்ஏ அருளை பாமகவில் இருந்து நீக்கி இருக்கிறார் அன்புமணி. சமீப காலமாக அருள், அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். தலைமையிடம் மன்னிப்பு கேட்க ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவுறுத்தியும் அவர் மதிக்கவில்லை என்பதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். சமீபத்தில், எம்எல்ஏ அருளை, சேலம் மாநகர் மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கியிருந்தார். சேலத்தில் அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், எம்எல்ஏ அருள் பங்கேற்காமல் நெஞ்சுவலி எனக்கூறி அட்மிட் ஆன நிலையில், கட்சி பதவியை பறித்த அன்புமணி, இப்போது, கட்சியை விட்டு நீக்கி உள்ளார்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ