தொடர்ந்து 4வது முறையாக ஒரே பார்முலா: திமுகவின் உத்தி | DMK | Election 2026 | ADMK | BJP
தொடர்ந்து 4வது முறையாக ஒரே பார்முலா: திமுகவின் உத்தி | DMK | Election 2026 | ADMK | BJP
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கத்தை திமுக ஜூலை 1ல் துவங்கியது.
அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் முதல் ஓட்டுச்சாவடி முகவர்கள் வரை வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.
பொதுவாக, ஆளுங்கட்சி தனது ஆட்சியின் சாதனைகளை முன்வைத்தும் பிரதான எதிர்க்கட்சியை விமர்சித்தும்தான் பிரசாரம் செய்யும்.
ஆனால் மத்திய பா.ஜ., அரசை மட்டுமே விமர்சித்து, தேர்தல் பிரசாரத்தை தி.மு.க., துவங்கி உள்ளது.
இதற்காக, ஆறு கேள்விகள் அடங்கிய படிவத்தை தி.மு.க., தயாரித்துள்ளது.
அதை மக்களிடம் கொடுத்து ஆம், இல்லை என பதிலை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?
நீட் போன்ற தேர்வுகளில் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா?
டில்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
என கேள்விகள் அனைத்தும் பஜாவை வில்லனாக சித்தரிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி பொதுமக்களிடம் தி.மு.க.,வினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒரே காரணம் சிறுபான்மையினர் ஓட்டுகள் தான் என்கிறது திமுக வட்டாரம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ., எதிர்ப்பு தான் தமிழக அரசின் முக்கிய அம்சமாக உள்ளது.
பா.ஜ., எதிர்ப்பில் தீவிரம் காட்டியதால்தான், 2019, 2024 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது.
அது மட்டுமல்லாது, பா.ஜ.,வை தீவிரமாக எதிர்ப்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமாக கிடைக்க வழிவகுக்கும்.
மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, தமிழகத்திற்கு நிதி மறுப்பு ஆகிய விவகாரங்கள், தேர்தலில் பெரும் பயன் தரும் என, தி.மு.க., தலைமை நினைக்கிறது.
எனவே, வரும் சட்டசபை தேர்தலும், அதே பா.ஜ., எதிர்ப்பு உத்தியை, முதல்வர் ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.