உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 202 தொகுதிகளை ஈஸியா தூக்கலாம்: திட்டம் இதுதான் | BJP | ADMK | Election 2026

202 தொகுதிகளை ஈஸியா தூக்கலாம்: திட்டம் இதுதான் | BJP | ADMK | Election 2026

202 தொகுதிகளை ஈஸியா தூக்கலாம்: திட்டம் இதுதான் | BJP | ADMK | Election 2026 தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் பேசினார். பாஜ பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும். ஏற்கனவே பூத் கமிட்டி இருந்தாலும் அதில் உள்ள பலர் கட்சி செயல்பாட்டில் இல்லை. கட்சி தலைமை கேட்டதால், அவசர கதியில் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். இனி இதுபோன்று இருக்கக்கூடாது. ஏற்கனவே உள்ள பட்டியலை சரி பார்க்க வேண்டும். ஒரு பூத்திற்கு குறைந்தது, 12 பேரை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால், ஒரு சட்டசபை தொகுதிக்கு 3,600 பூத் ஏஜன்டுகள் கிடைப்பார்கள். இவர்களை வைத்து மண்டல மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். பூத் ஏஜன்டுகள் அக்கம், பக்கத்தில் பேசி பழகி, 3,600 புதிய உறுப்பினர்களை, கட்சியில் சேர்க்க முடியும். தமிழகத்துக்கான தேர்தல் வியூகங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்த்துக் கொள்வார். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ பெற்ற ஓட்டுகளை கணக்கிட்டு பார்த்தால், தி.மு.க.,வை விட 24 லட்சம் ஓட்டுகள் மட்டுமே குறைவு. இதை 234 தொகுதிகளுக்கும் கணக்கிட்டு பார்த்தால், 11,000 ஓட்டுகள் வருகின்றன. பூத்திற்கு கணக்கிட்டு பார்த்தால், 37 ஓட்டுகள் மட்டுமே குறைகிறது. இந்த வேறுபாட்டை சரி செய்தால், 202 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதற்கான பணிகளை பூத் கமிட்டிநிர்வாகிகள் செய்ய வேண்டும். வரும் 2026ம் ஆண்டு தேர்தல் நமக்கு முக்கியமல்ல; 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல்தான் நோக்கம். அதற்கான அடித்தளத்தை சட்டசபை தேர்தலில் அமைக்க வேண்டும். அ.தி.மு.க பொதுச்செயலர் பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளார். அதில், பா.ஜ தலைவர்களும் கலந்து கொள்வார்கள். பழனிசாமி செல்லும் இடமெல்லாம், நம்முடைய தொண்டர்கள் பலத்தை காட்ட வேண்டும் என நாகேந்திரன் கூறினார்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !