வேனில் இருந்தது எத்தனை பேர்? மாணவன் சொல்லும் விளக்கம் | Cuddalore Train Accident | school van
வேனில் இருந்தது எத்தனை பேர்? மாணவன் சொல்லும் விளக்கம் | Cuddalore Train Accident | school van கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் இறந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கி உள்ளது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேனுக்குள் இருந்தது மொத்தம் 4 மாணவர்கள். 16 வயது சாருமதி, 12 வயது நிமலேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட மாணவன் செழியன் வயது 15 சிகிச்சை பலனின்றி இறந்தான். செழியனும், சாருமதியும் சகோதரன், சகோதரி. காயம் அடைந்த மற்றொரு மாணவன் விஸ்வேஷ் மற்றும் வேன் டிரைவர் சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்தின் போது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகில் நின்ற அண்ணா துரை என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.