உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கி பறிமுதல் சம்பவத்தை என்ஐஏ விசாரிக்க கோரிக்கை! Guns Seized | BJP | NIA | Ambur

துப்பாக்கி பறிமுதல் சம்பவத்தை என்ஐஏ விசாரிக்க கோரிக்கை! Guns Seized | BJP | NIA | Ambur

துப்பாக்கி பறிமுதல் சம்பவத்தை என்ஐஏ விசாரிக்க கோரிக்கை! Guns Seized | BJP | NIA | Ambur திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஆசிப் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 7 கத்திகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆசிப்பின் சகோதரி வீட்டில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூரில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளதாகவும், இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமெனவும் பாஜவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
ஜூலை 08, 2025 23:47

விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணம்.....தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விட்டது போல் தெரிகிறது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ