உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமான கருப்பு பெட்டியின் முழு விபரம் வெளியாவது எப்போது? | Air india flight crash

விமான கருப்பு பெட்டியின் முழு விபரம் வெளியாவது எப்போது? | Air india flight crash

விமான கருப்பு பெட்டியின் முழு விபரம் வெளியாவது எப்போது? | Air india flight crash | Investigation | Black box | Investigation report | குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து ஜூன் 12ல் லண்டன் புறப்பட்ட ஏர் இண்டியா விமானம் அடுத்த சில நொடிகளில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 270 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் விமான விபத்துகளுக்கான புலனாய்வு நிறுவனம், தனது முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், விமானம் மோதி விபத்து நடந்த கட்டடத்தின் கூரையில் இருந்து ஜூன் 13ல் ஒரு கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டது. சிதறி கிடந்த விமான பாகங்களுக்கு இடையில் இருந்து மற்றொரு கருப்பு பெட்டியும் சிக்கியது. தகவல்கள் துல்லியமானவைதானா என்பதை உறுதிப்படுத்த பயன்படும் கோல்டன் சேசிஸ் எனும் முக்கிய பகுதி இந்த கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்துள்ளது. அதோடு கிராஸ் புரட்டக்ஷன் மாட்யூல் எனும் சிபிஎம் என்ற பகுதியும் கிடைத்துள்ளது. அதில் இருந்த தகவல்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யப்பட்டுவிட்டன. இந்த அறிக்கை விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே விமான விபத்து மற்றும் பயணியர் பாதுகாப்பு, கட்டண உயர்வு தொடர்பாக பார்லிமென்ட் பொதுக்கணக்குகுழு ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், ஏர்போர்ட் ஆணைய அதிகாரிகள், ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது விமான விபத்து குறித்த விசாரணை வெளிப்படைத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எம்.பிக்கள் வலியுறுத்தினர். விமான பயணங்களுக்கான கட்டணம் அதிகரித்துக்கொண்டே போவது, இருக்கை வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை