உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு பணி ஆணை பெற்ற 51,000 பேருக்கு பிரதமர் மோடி அட்வைஸ் New Appointments in Government Job

அரசு பணி ஆணை பெற்ற 51,000 பேருக்கு பிரதமர் மோடி அட்வைஸ் New Appointments in Government Job

அரசு பணி ஆணை பெற்ற 51,000 பேருக்கு பிரதமர் மோடி அட்வைஸ் New Appointments in Government Job| Modi| PM Rozgar Yojana| நாடு முழுதும் பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணை வழங்கினார். பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 47 இடங்களில் இந்நிகழ்ச்சி நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் கலந்து கொண்டார். ரயில்வே, தபால் துறை, மத்திய உள்துறை, சுகாதாரம், நிதி, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பிஎம் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மத்திய அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்றவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, நீங்கள் வெவ்வேறு துறைகளில் வேலை செய்தாலும், தேசத்திற்கான சேவை என்பது மட்டுமே லட்சியமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை