உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் | salem police Investigation | Crime

போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் | salem police Investigation | Crime

போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் | salem police Investigation | Crime தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன் என்கிற அப்புலு வயது 28. இவர் சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். தினமும் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட கோர்ட் உத்தரவிட்டது. 2019 மற்றும் 2025 தூத்துக்குடி கொலை வழக்கில் மதன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். மதன் இன்று காலை 10 மணி அளவில் அவரது மனைவி மோனிசாவுடன் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்தார். கையெழுத்து போட்டு விட்டு ஸ்டேஷன் அருகே உள்ள ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து மதனை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் அதே இடத்தில் இறந்தார். ஓட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மதனின் மனைவி ஓடி சென்று போலீசில் நடந்த சம்பவத்தை கூறினார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அஸ்தம்பட்டி போலீசார் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் தடயங்களை கைப்பற்றி மதனின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதன் கையை வெட்டி தனியாக எடுத்து, உடலில் 22 இடங்களில் வெட்டு இருந்தது. ஆறு பேர் 2 பைக்குகளில் வந்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அந்த கொலையில் பாதிக்கப்பட்டவர்கள் திட்டமிட்டு மதனை கொன்றார்களா என விசாரணை நடக்கிறது.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி