உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்படி தான் அராஜகம் செய்வேன்: திமுக புள்ளி வீடியோ வைரல் dmk ravichandran viral video | dmk vs admk

அப்படி தான் அராஜகம் செய்வேன்: திமுக புள்ளி வீடியோ வைரல் dmk ravichandran viral video | dmk vs admk

அப்படி தான் அராஜகம் செய்வேன்: திமுக புள்ளி வீடியோ வைரல் dmk ravichandran viral video | dmk vs admk சென்னை பெருங்குடி மண்டல குழு தலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன். சோழிங்கநல்லூர் திமுக மேற்கு பகுதி செயலாளராகவும் இருக்கிறார். பெருங்குடியில் உள்ள பகுதி நேர நூலகத்துக்கு சென்றார். அங்கு அதிமுக கட்சி சார்பில் அச்சிட்ட காலண்டர் தொங்கியது. அதை பார்த்ததும் கோபம் அடைந்த ரவிச்சந்திரன், வேலையில் இருந்த பெண் ஊழியர்களை பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார். ஆத்திரம் அடைந்த பெண் ஊழியர்கள் அவரை ரவுண்ட் கட்டி முறையிட்டனர். எப்படி கேட்ட வார்த்தை பேசலாம்; எப்படி எங்க அம்மாவை பற்றி பேசலாம் என்று சுற்றி வளைத்து கேள்வி கேட்டனர். அப்போதும் ரவிச்சந்திரன் அசரவில்லை. அப்படி தான் அராஜகம் செய்வேன். முடிஞ்சதை பாரு என்று அசால்ட்டா சொன்னார். தொடர்ந்து பெண்கள் முறையிட்டதால் நூலகத்தில் இருந்து கிளம்பினார். திமுகவினர் அராஜகத்தை பாருங்கள் என்று ரவிச்சந்திரன் செய்த செயலை ஆர்வலர்கள் பரப்பி வருகின்றனர்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை