டெல்டாவில் திரண்ட கூட்டத்தால் பழனிசாமி உற்சாகம் | ADMK | EPS | Election campaign
டெல்டாவில் திரண்ட கூட்டத்தால் பழனிசாமி உற்சாகம் | ADMK | EPS | Election campaign 7ம் தேதி முதல், சட்டசபை தொகுதி வாரியாக பழனிசாமி பிரசார பயணம் செய்து வருகிறார். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியை தந்தது கோவை. அங்கிருந்து தன் பயணத்தை பழனிசாமி துவங்கினார். மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் பெரும் கூட்டம் திரண்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் திமுக தான் பலம் வாய்ந்த கட்சி. சென்ற தேர்தலில் வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிட்டியது. ஆனாலும் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை தொகுதிகளில், இப்போது பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு அதிக கூட்டம் திறண்டுள்ளது. உற்சாகமடைந்த பழனிசாமி இந்த இடங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகளை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, காவிரி டெல்டா மாவட்டங்களில் எப்போதுமே திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த மாவட்டங்களில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இப்பகுதியிலேயே பழனிசாமியின் பிரசாரத்திற்கு கோவைக்கு இணையாக கூட்டம் திரண்டுள்ளது. இது மக்களுக்கு திமுக அரசு மீது உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது என்றனர்.