280 பேருடன் நடுக்கடலில் சொகுசு கப்பல் தீக்கிரை-பகீர் காட்சி indonesia ship fire | burnig ship video
280 பேருடன் நடுக்கடலில் சொகுசு கப்பல் தீக்கிரை-பகீர் காட்சி indonesia ship fire | burnig ship video இந்தோனேஷியாவில் பல அழகிய தீவுகள் இருக்கின்றன. மக்கள், சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்காக பல கப்பல்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் வடக்கு சுலவேசியா மாகாணத்தின் தலைநகர் மனாடோ துறைமுகத்தில் இருந்து அதே மாகாணத்தில் உள்ள தலாவுட் தீவுகளுக்கு கேஎம் பார்சிலோனா விஏ என்ற சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வந்தது. தலாவுட் தீவுகளில் இருந்து 280 பேருடன் மனாடோ நகர் நோக்கி அந்த சொகுசு கப்பல் புறப்பட்டது. இரண்டு இடங்களுக்கும் இடையேயான தூரம் 350 கிலோ மீட்டர். தீவில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியது. உள்ளே இருந்த பயணிகள் பீதியில் அலறினர். தீ பரவாத இடத்தை நோக்கி ஓடினர். லைப் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு உயிரை காப்பாற்ற கொத்து கொத்தாக கடலில் குதித்தனர். சொகுசு கப்பல் கொழுந்து விட்டு எரிந்தது. விண்ணை முட்டும் அளவு கரும் புகை மூட்டம் எழும்பியது. விபரீதத்தை உணர்ந்த மீட்டு படையினரும், உள்ளூர் மீனவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்ட தகவல் படி 280 பேரில் 150 பேர் மீட்கப்பட்டனர். 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 100க்கும் அதிகமான பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. இதற்கிடையே விபத்து தொடர்பான வீடியோ வெளியானது. பயணிகள் அலறி துடிக்கும் காட்சிகளும், கடலில் ஆங்காங்கி சிதறி உயிருக்கு போராடும் காட்சிகளும் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.