எஸ்ஐ மாமனார் மிரட்டல் விடுப்பதாக கண்ணீர் மல்க பேட்டி | dowry complaint | Vellore | Investigation
எஸ்ஐ மாமனார் மிரட்டல் விடுப்பதாக கண்ணீர் மல்க பேட்டி | dowry complaint | Vellore | Investigation வேலூர் சதுப்பேரி முல்லை நகரை சேர்ந்தவர் போலீஸ் எஸ்ஐ பாபா. இவரது மகன் காஜாரபீக். இவருக்கும் ராணிப்பேட்டையை சேர்ந்த நர்கீசுக்கும் 2023ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 30 சவரன் நகை, திருமண செலவு 10 லட்சம், பைக் வாங்க 1.50 லட்சம் பெற்றுள்ளனர். இருந்தும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக நர்கீஸ் கூறுகிறார். சென்ற மாதம் இது தொடர்பான சண்டையில் காஜாரபீக் அவரது பெற்றோர் பேச்சை கேட்டு மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும், அதில் நர்கீசின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு காலும் உடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. போலீஸ் எஸ்ஐயான மாமனார் தன்னை மிரட்டுவதாகவும், கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கவும் சத்துவாச்சாரி கலெக்டர் ஆபிசில் இன்று நர்கீஸ் புகார் அளித்தார். ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக வந்த அவரிடம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் விசாரணை செய்தார்.