உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வி.எஸ்.அச்சுதானந்தன் மரணம் எமர்ஜென்சி முதல் முதல்வர் வரை Former Kerala CM |V.S. Achuthanandan |Passe

வி.எஸ்.அச்சுதானந்தன் மரணம் எமர்ஜென்சி முதல் முதல்வர் வரை Former Kerala CM |V.S. Achuthanandan |Passe

வி.எஸ்.அச்சுதானந்தன் மரணம் எமர்ஜென்சி முதல் முதல்வர் வரை Former Kerala CM |V.S. Achuthanandan |Passed away | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் மிக முக்கியமானவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101. ஆலப்புழா மாவட்டத்தில் புன்னப்புரா கிராமத்தில் 1923ல் பிறந்த வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் Velikkakathu Sankaran Achuthanandan இளம் வயதிலேயே பொதுவுடைமை கொள்கைகளில் பிடிப்பு கொண்டிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 17 வயதில் உறுப்பினராக சேர்ந்து 1954ல் அக்கட்சியின் கேரள மாநில செயலாளராக ஆனார். 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அப்போது அச்சுதானந்தன் உள்பட 32 தேசிய குழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனும் புதிய கட்சியை தோற்றுவித்தனர். 1967ல் முதல் முறையாக அவர் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். எமர்ஜென்சி காலத்தில் 21 மாதங்கள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். 15 ஆண்டுகள் கேரள எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், 2006 முதல் 2011 வரை முதல்வராக பதவி வகித்தார். 2019ல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி திருவனந்தபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இதயப்பிரச்னை மற்றும் வயது மூப்பு தொடர்பான உடல்நலப்பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அச்சுதானந்தன், கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டநிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை