உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஸ் ஸ்டாண்டிலேயே வேலை காட்டிய அரசு டவுன் பஸ் | Govt city bus problem | Passengers angry

பஸ் ஸ்டாண்டிலேயே வேலை காட்டிய அரசு டவுன் பஸ் | Govt city bus problem | Passengers angry

பஸ் ஸ்டாண்டிலேயே வேலை காட்டிய அரசு டவுன் பஸ் | Govt city bus problem | Passengers angry | Starting problem | Coimbatore | கோவை, சிவானந்தா காலனியில் இருந்து காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்றிரவு TN 38 2398 எண் கொண்ட அரசு டவுன் பஸ் சிவானந்தா காலமையில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் ஏறிய பின், டிரைவர் பஸ்சை ஸ்டார்ட் செய்தபோது ஸ்டார்ட் ஆகவில்லை. பலமுறை முயற்சித்தும், பேட்டரியில் இருந்து வரும் மின்சாரம் கோளாறு காரணமாக ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் கண்டக்டருடன் பஸ்சில் இருந்த பயணிகள் சிலரும் இறங்கி பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றனர். நீண்ட நேரம் தள்ளிப் பார்த்தும் பஸ் ஸ்டார்ட் ஆகாததால், கடுப்பான பயணிகள் வேறு பஸ்சில் ஏறிச் சென்றனர். வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல உதவும் அரசு நகர பஸ், நரக பஸ்சாக மாறியதாக பயணிகள் புலம்பியபடியே சென்றனர். இதேபோல் நேற்று ஒத்தக்கால் மண்டபத்தில் பஸ் பழுதாகி தீ பிடித்தது. உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாததால், ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை