சைபர் சட்டங்களை மீறியதால் மத்திய அரசு நடவடிக்கை Indian government cracks down |on streaming apps|OTT
சைபர் சட்டங்களை மீறியதால் மத்திய அரசு நடவடிக்கை Indian government cracks down |on streaming apps|OTT ஆபாச மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கங்களை வெளியிட்டதற்காக 25 ஓடிடி(OTT) தளங்கள், ஆபாச செயலிகள் மற்றும் வெப்சைட்டுகளை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் பெண்கள் ஆபாச சித்தரிப்பு தடை சட்டத்தின் கீழ் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களில் பிரபலமான உள்ளு (Ullu), ஆல்ட்(ALTT), டெசிஃபிளிக்ஸ் (Desiflix), பிக் ஷாட்ஸ் (Big Shots), பூமெக்ஸ் (Boomex), நவரச லைட் (Navarasa Lite), மூட்எக்ஸ் (MoodX), ஹாட்எக்ஸ் விஐபி (HotX VIP), வாவ் என்டர்டெயின்மென்ட்(Wow Entertainment) மற்றும் சில ஆபாச செயலிகள், இணையதளங்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் முடக்கப்பட்டு உள்ளன இந்த தளங்கள் எந்தவொரு கதையோ, கருப்பொருளோ இல்லாமல் ஆபாச உள்ளடக்கங்களை எல்லா வயதினரும் எளிதாக அணுகும் வகையில் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு ஆபாச கன்டென்ட்கள் உள்ள தளங்கள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. மத்திய அரசு இத்தகைய தளங்களை முடக்குவதற்கு முன் பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. அதை மீறி இந்த தளங்கள் செயல்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளன.