உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 200 மீட்டர் பறந்த அரசு பள்ளி கூரை-நீலகிரியில் பகீர் சம்பவம் devala govt school issue | pandalur rain

200 மீட்டர் பறந்த அரசு பள்ளி கூரை-நீலகிரியில் பகீர் சம்பவம் devala govt school issue | pandalur rain

200 மீட்டர் பறந்த அரசு பள்ளி கூரை-நீலகிரியில் பகீர் சம்பவம் devala govt school issue | pandalur rain நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா பகுதிகளில் இரவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையின் கூரை காற்றில் அடியோடு பிடுங்கியது. அங்கிருந்து 200 மீட்டர் பறந்து ஜெமீலாமஜீத் என்பவர் வீட்டின் மீது விழுந்தது. வீட்டின் கூரையும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. தேவாலா பள்ளிக்கூடத்தில் 2018ம் ஆண்டில் தான் பராமரிப்பு பணி மேற்கொண்டனர். மழை பெய்யும் போது வகுப்பறையில் போட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வழியே ஒழுகியதால் அதை மாற்றினர். புதிதாக தகரத்தில் கூரை அமைத்தனர். ஆனால் அது 7 ஆண்டு கூட தாக்குப்பிடிக்கவில்லை. காற்றில் பிடுங்கி விட்டது. தரமற்ற முறையில் கூரை அமைத்தது தான் இதற்கு காரணம். சம்பவம் இரவில் நடந்ததால் பாதிப்பில்லை. இதுவே பகலில் நடந்திருந்தால் மாணவர்களின் கதி என்ன ஆகி இருக்கும் என்று தேவாலா மக்கள் அரசை சாடினர்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ