திமுக வியூகத்தை உடைக்கும் அதிமுகவின் திட்டம் | ungaludan stalin | Engaludan Edappadiyar
திமுக வியூகத்தை உடைக்கும் அதிமுகவின் திட்டம் | ungaludan stalin | Engaludan Edappadiyar தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழகம் இயக்கம் துவக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. திமுகவினர் மக்களை சந்தித்து, ஆறு கேள்விகள் அடங்கிய படிவத்தை வழங்கி, அதை பூர்த்தி செய்து தரும்படி கேட்கின்றனர். அதில், மகளிர் உரிமைத் தொகை பெற்றிட, விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை, நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா? டெல்லி அதிகாரத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர்தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா? என்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கேள்விகள், ஆம் என சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே பாணியில், அ.தி.மு.க., சார்பில், உருட்டுகளும் திருட்டுகளும், துரோக மாடல் உருட்டுகள் என்ற தலைப்பில், 10 கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு விலக்கு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 ரூபாய் காஸ் மானியம், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துதல். மக்களிடம் கேள்விகள் மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் திட்டம், 5.5 லட்சம் அரசு வேலைகள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை, அனைத்து பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்குதல். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு போன்ற, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என கேட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, 10க்கு 0 மதிப்பெண் போட்டு, துரோக தி.மு.க.,விற்கு நான் தரும் மார்க் என குறிப்பிடும் வகையில், நோட்டீஸ் அச்சிடப் பட்டுள்ளது. மேலும், அதில் என் நலனுக்காக இ.பி.எஸ்., உடன் நான் என்ற வாசகம் அச்சிடப்பட்டு, அதன் கீழ் சம்பந்தப்பட்டவர் விபரம் சேகரிக்கப்படுகிறது. இரு கட்சிகளும், மக்களிடம் கேள்விகள் கேட்டு பதில் பெறுவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் கள அரசியலிலும் இரு கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழக அரசின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தி.மு.க., திட்டமாகவே பார்க்கும் அ.தி.மு.க., அதற்கும் பதிலடி கொடுத்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்பதற்குப் பதிலாக, எங்களுடன் எடப்பாடியார் என்ற ஒளிரும் டிஸ்பிளேக்களை, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் அ.தி.மு.க.,வினர் மாட்டி வருகின்றனர்.