மோடியிடம் ஸ்டாலின் கேட்டது என்ன? பரபர தகவல் modi tn visit | stalin letter to modi | modi in trichy
மோடியிடம் ஸ்டாலின் கேட்டது என்ன? பரபர தகவல் modi tn visit | stalin letter to modi | modi in trichy தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த மனுவை மோடியிடம் ஒப்படைத்தார். அதில் 5 முக்கிய கோரிக்கைகளை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதன் விவரம் வருமாறு: எஸ்எஸ்ஏ திட்டத்தில் தமிழகத்துக்கான கல்வி நிதி நிலுவைத் தொகை 2151.59 கோடி ரூபாயையும்; இந்த கல்வி ஆண்டுக்கான முதல் தவணை தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை ஒரு நிபந்தனையாக வைக்காமல் நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்; தாம்பரம்-சென்னை இடையே 4வது ரயில் வழித்தடத்தை விரைவாக அமைக்க வேண்டும்; கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியை வேகப்படுத்த வேண்டும்; திண்டிவனம் டு செஞ்சி டு திருவண்ணாமலை, ஈரோடு டு பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை டு தூத்துக்குடி, சென்னை டு கடலூர் ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்படி உரிமைகளை பாதுகாக்க வேண்டும். சேலம் உருக்காலை அமைக்க தமிழக அரசு வழங்கிய நிலத்தில் 1500 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது; அதில் பாதுகாப்பு தொழில் பூங்கா நிறுவ ஆர்வமாக இருக்கிறோம். அந்த நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மக்களின் உணர்வுகளுக்கும் மாநில வளர்ச்சிக்கும் மதிப்பு கொடுத்து பிரதமர் மோடி உரிய தீர்வு தருவார் என்று தான் நம்புவதாக ஸ்டாலின் கூறி உள்ளார்.