173 பயணிகளுடன் கிளம்பிய விமானத்தில் அதிர்ச்சி | American Airlines | Denver International Airport
173 பயணிகளுடன் கிளம்பிய விமானத்தில் அதிர்ச்சி | American Airlines | Denver International Airport அமெரிக்காவில் டென்வர் ஏர்போர்ட்டில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ பிடித்தது. மியாமிக்கு செல்ல இருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன் டயரில் இருந்தது புகை வந்தது. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் இருந்த 173 பயணிகள், பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியே வந்தனர். அவரசகால பலூன் மூலம் குதித்த ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில், அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் பயணிகள் அவசர கால வழிகளை பயன்படுத்தி விமானத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் இருந்தது. விமானத்தின் இடது பின்புறத்தில் இருந்து புகை வெளியேறுவது தெளிவாக தெரிகிறது.