உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் பாலாஜி வாழ்நாளில் இந்த வழக்கு முடியாது! | Senthil Balaji | DMK | Supreme Court

செந்தில் பாலாஜி வாழ்நாளில் இந்த வழக்கு முடியாது! | Senthil Balaji | DMK | Supreme Court

செந்தில் பாலாஜி வாழ்நாளில் இந்த வழக்கு முடியாது! | Senthil Balaji | DMK | Supreme Court அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக அமலாக்கத்துறையால் 2023ல் கைதானார். ஒரு வருடத்துக்கு பின் ஜாமின் கிடைத்து வெளியே வந்தார். பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஒய் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக ஆஜரான வக்கீல் கோபால் சங்கரநாராயணன் வழக்கில் 2000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. செந்தில் பாலாஜியை காப்பாற்ற முயற்சிக்கிறது என வாதாடினார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கில் 2000 பேர் குற்றம் சாட்டப்பட்ட காரணம் என்ன? வேலை பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் 2000 பேரை குற்றவாளிகளாக சேர்த்து, விசாரணையை தாமதப்படுத்த முயற்சி நடக்கிறதா? இப்படியே போனால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு முடியப் போவதில்லை. செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுதும் இந்த வழக்கு நடக்கும் என காட்டமாக குறிப்பிட்டனர். அமைச்சரை தவிர வழக்கில் கூறப்படும் தரகர்கள், இடைத்தரகர்கள் யார்? அமைச்சரின் பரிந்துரையில் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள், தேர்வுக் குழு உறுப்பினர்கள், நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்? இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை நாளை பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை சீக்கிரம் முடிக்கவும் அறிவுறுத்தினர்.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை