உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரைவரை பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரணை! Water Tanker Lorry | Poonamallee | Chennai

டிரைவரை பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரணை! Water Tanker Lorry | Poonamallee | Chennai

டிரைவரை பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரணை! Water Tanker Lorry | Poonamallee | Chennai சென்னை ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி தண்ணீர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த அழகுராஜா ஓட்டினார். சென்னீர்குப்பம் அருகே வேகமாக சென்ற லாரி, முன்னால் சென்ற பைக் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் இருந்த ஆண், பெண் காயம் அடைந்தனர். கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சென்ற லாரி, முன்னே சென்ற பைக், கார் மீது மோதி தறி கெட்டு ஓடியது. இறுதியில் மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. மின்கம்பத்தில் இருந்து தீப்பொறிகள் பறந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் லாரி டிரைவரை பிடித்து கட்டி வைத்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்தில் பைக்கில் சென்ற தனபால் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலர் மீட்கப்பட்டு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர். சுந்தரசோழபுரத்தை சேர்ந்த தேவி என்பவர், கிருஷ்ணன் என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றனர். இந்த விபத்தில் இருவரும் காயம் அடைந்தனர். ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட தேவி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. போலீசார் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். மின் ஊழியர்கள் மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி டிரைவர் மது போதையில் வாகனத்தை இயக்கினாரா என ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை