உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைக் டாக்ஸி டிரைவரின் எல்லை மீறிய செயல் | Bike Taxi | Chennai

பைக் டாக்ஸி டிரைவரின் எல்லை மீறிய செயல் | Bike Taxi | Chennai

பைக் டாக்ஸி டிரைவரின் எல்லை மீறிய செயல் | Bike Taxi | Chennai குஜராத்தை சேர்ந்த 24 வயது பெண் சென்னை வேப்பேரியில் தங்கி இருக்கிறார். தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் காலை,மாலை பைக் டாக்சி புக் செய்து ஆபீசுக்கு சென்று வந்தார். 20 நாட்களுக்கு முன் சம்பத் என்கிற பைக் டாக்சி டிரைவர் அறிமுகமானார். இனி நீங்க ஆப் மூலம் எல்லாம் புக் செய்ய வேண்டாம். நானே தினமும் காலை,மாலை சொல்லும் நேரத்துக்கு வருகிறேன் என்றாராம். சம்பத் பேச்சை நம்பிய பெண் அதற்கு சம்மதித்துள்ளார். கடந்த 20 நாட்களாக முறையாக பிக்-அப், டிராப் நடந்துள்ளது. திடீரென வியாழனன்று மாலை சம்பத்துக்கு சல்லாப புத்தி எட்டி பார்த்தது. அண்ணா மேம்பாலம் அருகே பெண்ணுடன் செல்லும் போது பைக் வேகத்தை குறைத்தார். பின்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். கத்தி சத்தம் போட்ட அவர், உடனடியாக பைக்கை நிறுத்த சொன்னார். போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து சம்பத் மீது புகார் அளித்தார். ஸ்பாட்டுக்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பத்தை கைது செய்தனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு புழல் சிறையில் அடைத்தனர. விசாரணையில் சம்பத் நாமக்கல் சேந்தமங்களத்தை சேர்ந்தவர் என தெரிந்தது. சிவில் இஞ்சீனியராக உள்ளார். பார்ட் டைமாக பைக் டாக்சி ஓட்டி வந்துள்ளார். இப்போது அவரது பைக்கும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ