உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எஸ்எஸ்ஐ சண்முகவேல் குடும்பத்துக்கு 1 கோடி நிதி அறிவிப்பு | Kudimangalam SSI | Tiruppur | CMO

எஸ்எஸ்ஐ சண்முகவேல் குடும்பத்துக்கு 1 கோடி நிதி அறிவிப்பு | Kudimangalam SSI | Tiruppur | CMO

எஸ்எஸ்ஐ சண்முகவேல் குடும்பத்துக்கு 1 கோடி நிதி அறிவிப்பு | Kudimangalam SSI | Tiruppur | CMO திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன் தங்கி வேலை செய்தனர். மூன்று பேரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தங்கபாண்டி, மணிகண்டன் சேர்ந்து தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் சிறப்பு எஸ்ஐ சண்முகவேல், டிரைவர் அழகுராஜா விசாரிக்க சென்றனர். எஸ்எஸ்ஐ சண்முகவேல் தந்தை மகன் சண்டையை பிரித்துள்ளார். போலீசார் வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி உள்ளார். காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். மூர்த்தி, தங்கபாண்டியை போட்டோ எடுத்து சண்முகவேல் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். இருவரிடமும் பேசிக்கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் அரிவாளுடன் வெட்ட பாய்ந்துள்ளார். தங்கபாண்டியும், மூர்த்தியும் தாக்க பாய்ந்து போலீசார் இருவரையும் அரிவாளுடன் துரத்தி உள்ளனர். போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து எஸ்எஸ்ஐ சண்முகவேலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். டிரைவர் அழகுராஜா ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். குடிமங்கலம் போலீசார் ஸ்பாட்டுக்கு வந்த போது சண்முகவேல் உயிருடன் இல்லை. அவருக்கு வயது 57. தப்பிச் சென்ற மூன்று பேரையும் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். மூர்த்தியின் மனைவி மற்றும் மருமகளிடம் விசாரணை நடக்கிறது. உடுமலை மற்றும் பல்லடம் டிஎஸ்பிக்கள் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனிடம் விசாரித்தனர். எம்எல்ஏ மகேந்திரன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சண்முகவேல் குடும்பத்தினரிடம் ஆறுதல் சொன்னார். சண்முகவேல் இறப்புக்கு இரங்கல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை