முதியவரை தாக்கிய இளைஞரின் வெறிச்செயல் | Fight with Youth & old man | Man helped old man | Youth bit
முதியவரை தாக்கிய இளைஞரின் வெறிச்செயல் | Fight with Youth & old man | Man helped old man | Youth bit mans ear | Vyasarpadi | சென்னை வியாசர்பாடி கக்கஞ்சி காலனியை சேர்ந்தவர் பாஸ்கர், வயது 50. கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே உள்ள அழகு முத்துமாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வயதான முதியவரை இளைஞர் ஒருவர் அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பாஸ்கர் முதியவரை காப்பாற்றி உள்ளார். அப்போது பாஸ்கருக்கும் முதியவரை அடித்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கோபமடைந்த அந்த இளைஞர் பாஸ்கரை கீழே தள்ளி அவரது இடது காதை கடித்துள்ளார். இதில் காதின் ஒரு பகுதி தனியாக வந்துள்ளது. அதை கவனிக்காமல் வீட்டிற்கு சென்ற பாஸ்கர், பின் வலி தாங்க முடியாமல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், செம்பியம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், வியாசர்பாடியை சேர்ந்த 23 வயது அஜித்குமார் தான் பாஸ்கர் காதை கடித்தது தெரிந்தது. அவன் கடித்து துண்டான பாஸ்கர் இடது காதின் சிறிய பாகம் கிடைக்கவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செயத போலீசார், அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.