உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜீவ் சிலை அருகிலேயே காங். நிர்வாகிகள் மோதல் | Rajiv birthday | Congress | Executive fight | Villu

ராஜீவ் சிலை அருகிலேயே காங். நிர்வாகிகள் மோதல் | Rajiv birthday | Congress | Executive fight | Villu

ராஜீவ் சிலை அருகிலேயே காங். நிர்வாகிகள் மோதல் | Rajiv birthday | Congress | Executive fight | Villupuram முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் எஸ்சி-எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சேகரும், அதே அணியைச் சேர்ந்த சுரேஷூம் ஒரே நேரத்தில் மாலை அணிக்க மேடை ஏறினர். அப்போது முதலில் யார் மாலை போடுவது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருவரும் சிலை அருகிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு இருந்த கட்சி தொண்டர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் காங்கிரஸ் கட்சியினர் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ