ஜப்பான் பயணத்தில் மோடியின் மாஸ்டர் பிளான் | japan e10 shinkansen | Modi Japan
ஜப்பான் பயணத்தில் மோடியின் மாஸ்டர் பிளான் | japan e10 shinkansen | Modi Japan அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய தயாரிப்புகளுக்கு 25 சதவீத வரி விதித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இது ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வந்தது. அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது போன்ற காரணங்களுக்காக கூடுதல் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்திய பின், கூடுதல் 25 சதவீதம் வரி விதிக்கப் படாது என்று சொல்கிறார். அமெரிக்காவின் தந்திரத்தை அறிந்து கொண்ட பிரதமர் மோடி, இங்கிலாந்துடன், ப்ரீ டிரேடு வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனால், இங்கிலாந்து மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு, நம் பொருட்கள் எளிதில் சென்றடையும். இது போல், பல நாடுகளை நாம் அணுகலாம். அந்த வகையில் அடுத்ததாக ஜப்பான், சீனாவை நோக்கி இந்தியாவின் பார்வை திரும்பி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 29ல் பிரதமர் மோடி ஜப்பான் செல்ல உள்ளார். ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் அங்கு நடக்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மோடியின் ஜப்பான் பயணத்தின் முக்கிய நோக்கம் மும்பை - அமதாபாத் புல்லெட் ரயில் திட்டம் பற்றியதாகும். ஜப்பானின் E10 சீன்கான்சென் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர பேச்சு நடக்க உள்ளது. ஜப்பானின் E10 ஷிங்கன்சென் என்பது ஜப்பானின் அடுத்த தலைமுறை அதிவேக ரயிலாகும். இது தற்போது பயன்பாட்டில் உள்ள E5 ரயில்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்கள் ஜப்பானின் ரயில்வே நிறுவனமான JR East மூலம் தயாரிக்கப்படுகின்றன. 2030 ஆம் ஆண்டில் இந்த ரயில்கள் வணிக ரீதியாக இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இதன் வடிவமைப்பு காற்றோட்டத்தை மேம்படுத்துவதோடு, பயணத்தின்போது குறைந்த இரைச்சலை ஏற்படுத்தும். அதிநவீன அதிர்வு தடுப்பு அமைப்புகள் மற்றும் பூகம்பத்தின்போது ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பங்கள் உள்ளன. மும்பை - அமதாபாத் புல்லெட் ரயில் திட்டத்தில் இந்த அதிநவீன E10 சீன்கான்சென் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனை பெறுவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வது மோடியின் ஜப்பான் பயணத்தின் முதல் இலக்காகும். அடுத்து இந்தியா-ஜப்பான் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் பேசப்பட உள்ளது. ஜப்பான் பயணத்தை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்தும் மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கும் செல்கிறார் மோடி. அமெரிக்காவின் வார்த்தக பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்,சீனா போன்ற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்திக்கொண்டுள்ளது இந்தியா. அங்குள்ள தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து, மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவது எதிர்கால இலக்காக உள்ளது.