லாரி கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுங்கிய யானை
லாரி கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுங்கிய யானை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடு ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அரேப்பாளையம் பிரிவு அருகே ரோட்டில் சுற்றிய யானை, லாரியை மறித்தது. டிரைவர் வண்டியை நிறுத்தினார். அலேக்காக, லாரி மீது ஒரு கால் வைத்து, மேலே இருந்த கரும்பை எடுக்க யானை முயன்றது. யானையின் மதிக்கு தாங்காமல் லாரியின் கண்ணாடி சடசடவென உடைந்தது. ஒரு கரும்பு கட்டை மட்டும் எடுத்துக்கொண்ட யானை, சமத்து பிள்ளையாக ரோட்டோரம் ஒதுங்கி நின்றது. லாரி புறப்பட்டது. லாரியை யானை மறித்த விஷயம் பரவியதால், பிற வாகன ஓட்டிகள் யானை செல்வதற்காக அரைமணிநேரம் காத்திருந்து பின் சென்றனர்.
ஆக 21, 2025