2 ஆண்டுகளாக யாழ்பாணத்தில் நிற்கும் படகுகளை மீட்க நடவடிக்கை! Boat rescue | TN Fishermen | Rameshwaram
2 ஆண்டுகளாக யாழ்பாணத்தில் நிற்கும் படகுகளை மீட்க நடவடிக்கை! Boat rescue | TN Fishermen | Rameshwaram | Srilanka 2022, 2023ம் ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் யாழ்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் முடிந்தநிலையில் 7 படகுகளை விடுவிக்க யாழ்பாணம் நீதிமன்றம் 2023ல் உத்தரவிட்டது. அந்த படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இந்திய, இலங்கை அரசிடம் மனு அளித்திருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மனு பரிசீலிக்க படாமல் இருந்தது. தற்போது அந்த படகுகளை தமிழகம் எடுத்து செல்ல இலங்கை வெளியுறவு துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அந்த படகுகளை ஆய்வு செய்ய 14 பேர் கொண்ட குழு இலங்கை கிளம்பியது. அந்த குழுவை இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பர். அவர்கள் மீனவர்களை அழைத்து சென்று படகுகளை ஆய்வு செய்ய உதவுவர். மீனவர்கள் குழு யாழ்ப்பாணத்தில் தங்கி, படகுகளின் தரம் மற்றும் உறுதி தன்மை, இன்ஜின் நிலை உள்ளிட்டவற்றை சோதனை செய்வர். பின்னர் இந்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அந்த படகுகளை மீனவர்கள் தமிழகம் கொண்டு வர உள்ளனர்.