உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆற்றங்கரையில் ஆங்காங்கே பள்ளம்; மக்கள் அதிர்ச்சி | Thamirabarani | River bank

ஆற்றங்கரையில் ஆங்காங்கே பள்ளம்; மக்கள் அதிர்ச்சி | Thamirabarani | River bank

ஆற்றங்கரையில் ஆங்காங்கே பள்ளம்; மக்கள் அதிர்ச்சி | Thamirabarani | River bank | Srivaikundam | Tirunelveli தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இதற்கு கீழ் பகுதியில் இருந்து ஏரல் வரை ஆற்றின் வலது பக்க கரை சீரமைக்கும் பணி சென்ற ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகளாக ஆற்றின் வலது கரையை முழுமையாக பலப்படுத்துதல் மற்றும் கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்தது. 5 கோடியே 28 லட்சம் மதிப்பில் நடந்த இந்த பணிகள் சமீபத்தில் முடிந்தது. ஆனால் நேற்று மாலை கொட்டிய மழையில் சீரமைக்கப்பட்ட ஆற்றங்கரையில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழையில் கரைந்து ஓடி, பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது. மண் அரிப்பால் அரித்து வரப்படும் மணல்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரை நாய்கள் குழி தோண்டும் அளவுக்கு பலவீனமாக உள்ளது. மழை காலத்திற்கு முன் சேதங்களை சரி செய்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை