இந்து நினைவிடத்தில் முஸ்லிம் பெண்கள் செய்த செயல் | shaniwarwada fort | maharashtra religious issue
இந்து நினைவிடத்தில் முஸ்லிம் பெண்கள் செய்த செயல் | shaniwarwada fort | maharashtra religious issue மகாராஷ்டிராவின் புனே நகரில் இந்துக்களுடன் தொடர்புடைய ஷனிவர்வாடா என்ற பழமையான நினைவுச் சின்னம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தை 18ம் தேதி பார்வையிட சென்ற மூன்று முஸ்லிம் பெண்கள் அங்கு திடீரென தொழுகையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது பற்றி அறிந்த பாஜ மற்றும் ஹிந்து அமைப்பினர், ஷனிவர்வாடாவில் தொழுகை நடத்திய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தொல்லியல் துறை இடத்தில் விதியை மீறி தொழுகையில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதற்கிடையே பாஜ ராஜ்யசபா எம்பி மேத்தா குல்கர்னி தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் ஷனிவர்வாடாவுக்கு சென்று கோமியம் மற்றும் மாட்டு சாணத்தை தெளித்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர். இது மக்களிடையே மத ரீதியில் மோதலை ஏற்படுத்தும் முயற்சி என்று ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த பாஜ அமைச்சர் நிதேஷ் ரானே, ‛ஷனிவர்வாடா ஹிந்துக்கள் மற்றும் சத்ரபதி சிவாஜிக்கு நெருக்கமான இடம் என்பது மட்டுமின்றி வீரத்தின் சின்னமாகவும் உள்ளது. இங்கு தொழுகை நடத்தியது போல் ஹாஜி அலியில் அனுமன் சாலிசாவை பாட முஸ்லிம்கள் அனுமதிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.