உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போலீஸ் பாதுகாப்பு | monsoon | Heavy Rain | Dams lakes Full | T

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போலீஸ் பாதுகாப்பு | monsoon | Heavy Rain | Dams lakes Full | T

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போலீஸ் பாதுகாப்பு | monsoon | Heavy Rain | Dams lakes Full | TNGovt வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சேலம், ஈரோடு, தேனி, மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல அணைகளில் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் 14,141 ஏரிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணைகள் திறப்பையும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும் பார்க்க, மக்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்வது வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளுக்கு அருகே மக்கள் செல்ல நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆற்றுப்பகுதிகளில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முக்கிய அணைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !