ராமதாசின் நடவடிக்கையால் அப்செட் ஆன அன்புமணி Anbumani| pmk| Ramadoss| pmk Clash| anbumani clash
ராமதாசின் நடவடிக்கையால் அப்செட் ஆன அன்புமணி Anbumani| pmk| Ramadoss| pmk Clash| anbumani clash| no compromise பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வெடித்த மோதல், 10 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்தார். அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம், பாஜ தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா ஆகியோர் அப்பா, மகன் இருவரையும் சந்தித்து, சமாதானமாக செல்லுமாறு வலியுறுத்தினர். தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை நானே தீர்மானிப்பேன் என, ராமதாஸ் திட்டவட்டமாக கூறியதால் சமாதானம் ஏற்படவில்லை. பாமக செயல் தலைவராக, தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை, ராமதாஸ் நேற்று நியமித்தார். இச்சூழலில், மாவட்ட செயலாளர்கள் உட்பட பாமக நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி, இனி அப்பாவுடன் சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை; நாம் தனி கட்சியக செயல்பட வேண்டும். நாம் தான் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும். ராமதாசை, இரண்டு பெண்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என கூறியதாக தெரிகிறது.