உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக மா.செ., - மகளிர் அணி நிர்வாகி இடையே கோஷ்டி மோதல் | TVK | Vijay | Pulianthope TVK

தவெக மா.செ., - மகளிர் அணி நிர்வாகி இடையே கோஷ்டி மோதல் | TVK | Vijay | Pulianthope TVK

தவெக மா.செ., - மகளிர் அணி நிர்வாகி இடையே கோஷ்டி மோதல் | TVK | Vijay | Pulianthope TVK தவெக மா.செ., - மகளிர் அணி நிர்வாகி இடையே கோஷ்டி மோதல் | TVK | Vijay | Pulianthope TVK சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பல்லவி. சென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர். புளியந்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் சென்னை வடக்கு மாவட்ட தவெக மகளிர் அணி இணை அமைப்பாளர். நேற்று மாலை 5 மணி அளவில் கட்சி உறுப்பினர்களுடன் கலைச்செல்வி, பல்லவி வீட்டிற்கு சென்றுள்ளார். பல்லவியை பார்க்க வேண்டும் என்னுடன் வந்துள்ள நிர்வாகிகளுக்கு பொறுப்பு வேண்டும் என கூறியுள்ளார். காத்திருக்க சொன்ன பல்லவி இரவு 10 மணி வரை வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. காத்திருந்து கடுப்பான கலைச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சத்தம் போட்டுள்ளனர். பல்லவி தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பிலும் புளியந்தோப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை