உள்ளரங்கில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு | Vijay | TVK | Vijay Meeting | Kanchipuram | TVK Meeting
உள்ளரங்கில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு | Vijay | TVK | Vijay Meeting | Kanchipuram | TVK Meeting நாளை காஞ்சிபுரம் ஜேப்பியார் கல்லுாரியில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நடக்க உள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சி. காஞ்சிபுரத்தை சேர்ந்த QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு உள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சியினரும், மக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் குறைகளை விஜய் கேட்க உள்ளதாக தெரிகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு என்பதால் கல்லூரி வளாகத்தை சுற்றி தகர சீட்டு அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.