வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கதிசக்தி ஹைன். போட்டுத் தள்ளுது ஹைன்.
நாமக்கல்லில் பயங்கர விபத்து 3 பேர் மரணம் | Namakkal | Namakkal Flyover Accident | Investigation
நாமக்கல்லில் பயங்கர விபத்து 3 பேர் மரணம் | Namakkal | Namakkal Flyover Accident | Investigation நாமக்கல் ரமேஷ் தியேட்டர் அருகே ரயில்வே மேம்பாலம் வழியாக இன்று காலை சமையல் எண்ணெய் லோடுடன் லாரி ஒன்று சென்றது. எதிர்புறத்தில் சாக்கு பை ஏற்றி வந்த லோடு வேன் ஒன்று எதிர்பாராத விதமாக லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் லோடு வேன் மோதிய வேகத்தில் பின்னால் வந்த பைக் மீது கவிழ்ந்தது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கி அப்பகுதியே கோரமாக காட்சி அளித்தது. பைக்கில் வந்த நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த கார்த்திக் வயது 24, சத்யாநகரை சேர்ந்த சேனாதிபதி, 25, லோடு வேன் ஓட்டி வந்த கர்நாடகாவை சேர்ந்த சையதுவாசின் வயது 30 ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயமடைந்த லாரி டிரைவர் ராஜேஷ் உடன் வந்த ஆகாஷ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இறந்தவர்களின் உடலை போராடி மீட்டனர். ஒருமணி நேரத்துக்கும் மேலாக பாலத்தில் போக்குவரத்து முடங்கியது. விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கதிசக்தி ஹைன். போட்டுத் தள்ளுது ஹைன்.