உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு! Textile Export | India - EU FTA
உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு! Textile Export | India - EU FTA | Trade Deals | Tiruppur ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் டில்லியில் கையெழுத்தானது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் ஆடைகள் நேரடியாக அங்கு வரியில்லாமல் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் காரணமாக அங்கு விலை குறைந்து கூடுதல் ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர 6 முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம். எனினும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பின்னலாடை துறை ஏற்றுமதிக்கு மேலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 20 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் நிறைவேறியது பின்னலாடை துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக கூடுதல் பணிமனைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தேவை. அதற்கான வசதிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என ஏற்றுமதியாளர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.