திமுக கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு | DMK | 2026 Election | election update | Kanimozhi | Saba
திமுக கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு | DMK | 2026 Election | election update | Kanimozhi | Sabareesan திமுக கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு | DMK | 2026 Election | election update | Kanimozhi | Sabareesan திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க எம்பி கனிமொழி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கோரிக்கை மனுவை பெற்று வருகின்றனர். திருப்பூர், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கனிமொழி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கூட்டம் துவங்கும் சில நிமிடங்களுக்கு முன், கனிமொழி வரவில்லை என அறிவிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாகவும், இதர பணிகள் இருப்பதாலும், அவர் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் கூறினார். கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவில் தென் மண்டல பொறுப்பாளராக கனிமொழி செயல்பட்டு வருகிறார். அதே நேரம் முதல்வரின் மருமகன் சபரீசன், நிர்வாகிகளிடம் நேரடியாக கருத்து கேட்டு வருவது இருவருக்கும் இடையே பனிப்போரை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் கனிமொழி வரவில்லை என கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபட்டது. கோவையில் நேற்று மாலை நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் கனிமொழி பங்கேற்கவில்லை.