சென்னைக்கு பயங்கரவாத அமைப்புகள் வைத்துள்ள குறி | NIA | Chennai | Royapettah
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் கெமிக்கல் இன்ஜினியர் ஹமீது உசேன். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர், தம்பி அப்துல் ரஹ்மான். மூவரும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு செங்கல்பட்டு செம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது மவுரிஸ், சேலையூர் காதர் நவாஸ் ஷெரிப், தண்டையார்பேட்டை அகமது அலி உமரி உடந்தையாக இருந்தனர். ஆறு பேரும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
ஆக 24, 2024