நிரவ் மோடியை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை! Nirav Modi | ED | 29 Crore Rupees
நிரவ் மோடியின் ₹29 கோடி சொத்துகள் முடக்கம்! மும்பையை சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக, சி.பி.ஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து நிரவ் மோடி, இவரது உறவினர் மெஹூல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பி ஓடினர். அடுத்த கட்ட நடவடிக்கையாக நிரவ் மோடியின் வங்கி கணக்குகள், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. நிரவ் மோடி 2019ல் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா சென்றால் நியாயமாக விசாரணை நடக்காது. அதனால் நாடு கடத்த அனுமதிக்கக் கூடாது என நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.