நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு nirmala sitharaman| karur| stapmpede| vijay tvk
கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். போலீஸ் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததுதான் நெரிசலுக்கு காரணம் என எதிர்கட்சிகள் தமிழக அரசை குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் வந்தார். கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசார பஸ் நின்றிருந்த இடத்தை அவர் முதலில் ஆய்வு செய்தார். குழந்தைகளும் பெண்களும் நெரிசலில் சிக்கி இறந்த சோகம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார். அவருக்கு எஸ்பி ஜோஷ் தங்கையா நெரிசலுக்கான காரணங்கள் குறித்து விவரித்தார். பிரசாரத்துக்கு செய்யப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கினார். எதிர்பார்த்ததைவிட கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதுதான் அசம்பாவிதம் நடக்க காரணமாகி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.