உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேர்மையாக வரி செலுத்துவோருக்கு செய்த மரியாதை: நிர்மலா

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு செய்த மரியாதை: நிர்மலா

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கும் முடிவை எடுத்தது எப்படி என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். பிரதமர் மோடி பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகள், கோரிக்கைகளை கேட்கிறார். அதற்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நேர்மையாக வரி செலுத்துவோரில் பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஏதாவது சலுகை அளிக்க வேண்டும் என்று விரும்பினோம். இதுபற்றி, பிரதமர் மோடியிடம் தெரிவித்தபோது, வரிச்சலுகை அளிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார். நீண்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பிறகு, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை தரலாம் என்ற யோசனையை பிரதமரிடம் தெரிவித்தேன். அவர் உடனே ஒப்புதல் அளித்தார். வரி விலக்கு உச்சவரம்பு உயர்வுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தாலும், நிதித்துறை அதிகாரிகள் மற்றும் வரி வாரிய அதிகாரிகளை அதற்கு ஒப்புக்கொள்ள வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்தேன். போதிய ஏற்பாடுகளை செய்த பிறகு, வரி விலக்கு அளிக்கலாம் என்று வாதிட்டனர். அவர்களை குறை சொல்லவில்லை. அதிகாரிகளை பொறுத்தவரை அரசுக்கு வருவாயை பெருக்குவதே அவர்களுடைய பணி. இருந்தாலும், அரசின் நோக்கத்தை எடுத்துக்கூறி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தேன். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதை செய்யும் வகையிலும், அவர்களின் சுமையை குறைக்கவும் இந்த வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடிதான் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ