உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லோக்சபாவில் சூட்டை கிளப்பிய ஹிந்தி எதிர்ப்பு விவகாரம்

லோக்சபாவில் சூட்டை கிளப்பிய ஹிந்தி எதிர்ப்பு விவகாரம்

லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் சட்ட திருத்த மசோதா தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்கட்சியை சேர்ந்த எம்பிகள் அமைச்சர் பேசிய இந்தி தவறாக உள்ளதாக குறை கூறினர். அப்போது ஆவேசமான நிர்மலா சீதாராமன், எனக்கு ஹிந்தி தெரியாமல் இல்லை. ஆனால், என்னை ஹிந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் புகார் கூற வேண்டும். சிறு வயதில் நான் ஹிந்தி கற்க விரும்பியதால் கேலி செய்யப்பட்டேன். தமிழகத்தில் இருந்து கொண்டு வட இந்தி மொழியான ஹிந்தி படிக்கிறாயா என என்னை கேட்டது இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கிறது. ஹிந்தி, சமஸ்கிருதம் படிப்பது என்பது ஏதோ அந்நிய மொழிகளாக கருதும் கலாச்சாரத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? நான் ஹிந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது. விரும்பிய மொழியை படிக்கும் அடிப்படை உரிமை தடுக்கப்பட்டது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ