நித்தியானந்தாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி | Nithyananda | Nithyananda case | High Court
போலீசாரால் தேடப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில் 2019ல் தலைமறைவானார். சோசியல் மீடியாவில் சொற்பொழிவு ஆற்றி கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே அறிவித்தார். இந்துக்களுக்கான தனி நாடாக அதை உருவாக்கியுள்ளதாகவும், தங்களுக்கென அரசு, கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் நித்யானந்தா அதிரடி கிளப்பினார். நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. கைலாசா எந்த நாட்டில் இருக்கிறது என்பதை நேரடியாக சொல்லாமல் நித்தியானந்தா குழப்பி வந்தார். இந்த சூழலில் சென்னை ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கின் மூலம் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.