அசர வைக்கும் பாஜ தேசிய செயல் தலைவர் நியமனம்: யார் இந்த நிதின் நபின்? | Nitin Nabin
பா.ஜ தேசிய தலைவர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியது. 2020ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அமைச்சர் நட்டா தலைவராக பொறுப்பேற்றார். லோக்சபா தேர்தலை கருதி, நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 2024 தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தற்போது நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த நிலையில், கட்சியின் புதிய தலைவர் நியமனம் குறித்து சில மாதங்களாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் முடிவில், பாஜ தேசிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பீகாரில் சாலை கட்டுமான துறையை அமைச்சராக உள்ளார். இவர் பாஜ மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன் ஆவார். தனது தந்தை மறைவுக்கு பின் தீவிர தேர்தல் அரசியலில் நுழைந்தார்.