உயிர்கள் உருவாவதை அறிய உதவும் ஆராய்ச்சி nobel prize| microRNA| nobel prize in medicine
ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல் வேதியியல் மருத்தும், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு 1901 முதல் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் விக்டர் அம்புரோஸ், கேரி ருவ்குன் (Victor Ambros and Gary Ruvkun) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காகவும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மனித நம் உடலில் அனைத்து செல்களும் ஒரே மரபணுவை கொண்டிருந்தாலும், செல்கள் வித்தியாசமானவை. தசை, நரம்பு செல்கள் போன்ற பல வகையான செல்கள் வெவ்வேறு செயல்களை செய்கின்றன. அதற்கு மரபணு ஒழுங்குமுறை காரணம். இந்த செல்கள் மரபணுக்களை மட்டுமே தங்களை இயக்க அனுமதிக்கின்றன.